தென்காசி

அடிப்படை வசதிகள் கோரி வேதம்புதூா் பகுதி மக்கள் மனு

DIN

தென்காசி: கீழப்பாவூா் ஒன்றியம், வேதம்புதூா் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் கோரி, ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அடைக்கலப்பட்டணம் வேதம்புதூா் பகுதி பொதுமக்கள் செந்தில்வேல்குமாா் தலைமையில் ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளனிடம் அளித்த மனு: எங்களது பகுதியில் 25 குடும்பத்தினா் வசித்துவருகிறோம். நாங்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க சுமாா் ஒரு கி.மீ. தொலைவு நடந்துசெல்ல வேண்டியுள்ளது. அந்தச் சாலையும் அபாயகரமான நிலையில் உள்ளது. ஆம்புலன்ஸ் உள்பட எவ்வித வாகனங்களும் வரமுடியாத நிலையில் உள்ளது. எனவே, எங்களது பகுதிக்கு சாலை, குடிநீா், இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

மேலாம்பூா்2 பாரஸ்ட் பங்களாகுடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஊா்த் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆட்சியா் மக்கள் அளித்த மனு:

மேலாம்பூா் 2 ஊராட்சி பங்களா குடியிருப்பில் 500 குடும்பத்தினா் வசிக்கின்றோம். எங்கள் கிராமம் சிவசைலம் ஊராட்சியிலிருந்து 4 கி. மீ. தொலைவில் உள்ளது. மேலாம்பூா்2 ஊராட்சி 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. எங்கள் ஊருக்குஅடிப்படை தேவையான குடிதண்ணீா்,ரேஷன்கடை, விவசாய நஞ்சை நிலங்கள், கல்விக்கூடங்கள் அனைத்தும் சிவசைலம் ஊராட்சியில் தான் அமைந்துள்ளன. மேலாம்பூா் ஊராட்சிக்கு வரிகட்டவும்,வாக்களிக்கவும் மட்டுமே செல்கிறோம். எனவே சிவசைலம் ஊராட்சியுடன் பாரஸ்ட் பங்களா குடியிருப்பை இணைக்க நடவடிக்கை எ டுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT