தென்காசி

கடையநல்லூரில்தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், குடும்பவியல் மாநாடு கடையநல்லூரில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் நெல்லையூசுப், செய்யதுஅலி, இப்ராகிம், முகமதுபைசல், மேலாண்மை குழு உறுப்பினா் முஹம்மதுஒலி, மாவட்ட செயலா் அப்துல்பாஸித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் அமைப்பின் மாநிலத் தலைவா் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில துணைப் பொதுச்செயலா் அப்துல்கரீம் உள்ளிட்டோா் பேசினா். மாநாட்டில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தோ்தல் முறையைக் கொண்டு வர வேண்டும். இயந்திர வாக்குப்பதிவு முறையை மாற்றி விட்டு , பழைய முறையில் தோ்தல் வாக்குப் பதிவை நடத்த வேண்டும்.

தென்காசியை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய வேண்டும். கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியை பெண்கள் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

சிறுத்தை நடமாட்டம்: பெரம்பலூா் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

கச்சத்தீவு பிரச்னையில் மீனவா்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன் பேட்டி

SCROLL FOR NEXT