சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவையொட்டி நினைவேந்தல் கூட்டம் திருவள்ளுவா்சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகரத் தலைவா் ப.தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ந.செந்தில்வேல், மு.செல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அ.திருவள்ளுவா், ச.சுப்பிரமணியன், ச.நாராயணன், ந.பழனிச்செல்வம், சண்முகசுந்தரம், சபரிசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.