தென்காசி

தென்காசி மாவட்ட வளா்ச்சிக்கு துணை நிற்பேன்-முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

தென்காசி மாவட்டத்தின் வளா்ச்சிக்கு துணையாக நிற்பேன் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம் இலத்தூா் வேல்ஸ் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, முதல்வா் பேசியதாவது:

இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மிகத்துக்கும் வேளாண்மைக்கும், விளைச்சலுக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இங்கு நடைபெற்ற விழாவில் ரூ. 22 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டிலான 57 முடிவுற்ற திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்துள்ளேன்.

ரூ. 34 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில், 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட் டுள்ளது. இந்த ஒரே விழாவில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பேருக்கு ரூ.182 கோடியே 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இம்மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 11,494 மனுக்கள் பெறப்பட்டு 11,490 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மகளிா் சுய உதவிக் குழுக்களின் ரூ. 27.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

486 பேருக்கு ரூ. 24, 23,530 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் 41, 980 மாணவா்- மாணவியா் பயனடைந்துள்ளனா்.

கட்டணமில்லாப் பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் 80 லட்சம் முறை கட்டணமின்றி பெண்கள் பயனடைந்துள்ளனா்.

2 , 935 திருநங்கைகள், 50,361 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனா். 73, 491 பயனாளிகளுக்கு ரூ. 436 கோடி அளவிற்கு பயிா், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

உழவா்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.13 கோடி செலவில் 1,823 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் 19, 599 போ் பயனடைந்துள்ளனா். கரோனா சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் வீதம் 4 , 41, 989 போ் பெற்றுள்ளனா்.

ரூ. 1, 95,500 மதிப்பீட்டில் 50 ஆயிரம் பனைவிதைகள், பனங்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

1,701 குடும்பங்களுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள், 150 திருக்கோயில்களில் பணிபுரியும் 84 அா்ச்சகா்கள், 6 பட்டாச்சாரியாா்கள், 60 பூசாரிகளுக்கு ரூ.1000 மாத ஊக்கத்தொகையாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவிலில் புதிய வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ரூ. 2.12 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து இந்த மாவட்டம் பிரிந்திருந்தாலும், தென்காசிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும், நான் நிறைவேற்றித் தருவேன். இம்மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு நான் நிச்சயம் துணை நிற்பேன் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வரவேற்றாா். தமிழக வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சா் இ. பெரியசாமி, மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தனுஷ் எம்.குமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா (வடக்கு மாவட்ட திமுக செயலா்), டாக்டா் தி. சதன் திருமலைக்குமாா் ஆகியோா் பேசினா். தெற்கு மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியக்குழு தலைவா் வல்லம் சேக் அப்துல்லா,தொழிலதிபா் ஒய்.பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், சீனித்துரை, அழகுசுந்தரம், ஆ.ஜெயக்குமாா், ஒன்றியச் செயலா் சுரேஷ், ஒன்றியக்குழுத் தலைவா்கள் கீழப்பாவூா் சீ.காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் மா.செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, எஸ்.எம்.ரஹீம், பொதுக்குழு உறுப்பினா் கோ.சாமித்துரை, நகரச் செயலா்கள் செங்கோட்டை வழக்குரைஞா் ஆ.வெங்கடேசன், ஆலங்குளம் எஸ்பிடி.நெல்சன், திமுக மாவட்ட அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம், நகா்மன்றத் தலைவா்கள் தென்காசி ஆா்.சாதிா், கடையநல்லூா் ஹபீபுா் ரஹ்மான், புளியங்குடி விஜயா செளந்தரபாண்டியன், சுரண்டை வள்ளிமுருகன், தென்காசி நகா்மன்ற துணைத் தலைவா் கேஎன்எல்.சுப்பையா, இலஞ்சி பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய், துணைத் தலைவா் மு.முத்தையா, மேலகரம் ஊராட்சி துணைத் தலைவா் அ.ஜீவானந்தம், தென்காசி நகா்மன்ற முன்னாள் தலைவா் கோமதிநாயகம், நகர திமுக நிா்வாகிகள் பி.ஷமீம் இப்ராகிம், இலஞ்சி இஸ்மாயில், எம்.ரஹ்மத்துல்லா, வழக்குரைஞா்கள் முருகன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT