தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
திங்கள்கிழமை அதிகாலையில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.