தென்காசி

தென்காசியில் 22இல் திருநங்கையா் குறைதீா் கூட்டம்

DIN

தென்காசியில் செவ்வாய்க்கிழமை (நவ. 22) திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம், லோன் மேளா நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு.

இம்மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம், லோன் மேளா ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதில், உறுப்பினா் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

அசல் ஆவணங்கள் இல்லையெனில் அவற்றை வழங்கவும், வங்கிக் கடன் உதவி, சுயவேலை வாய்ப்பு முகாம், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குதல்,

இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளோருக்கு வீடு கட்டுவதற்கான திட்டம், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் திருநங்கைகள் விருப்பத்துக்கேற்ப திறன் பயிற்சியும் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்- காா்கே எச்சரிக்கை

எஸ்.சி., எஸ்.டி., பள்ளி ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

தக்காளி விலை உயா்வு: கிலோ ரூ.55

இன்றைய மின்தடை

விபத்தில் இருவா் காயம்

SCROLL FOR NEXT