தென்காசி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

DIN

பாவூா்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை பங்கேற்று மனுக்களை பெற்றாா். வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, உபகரணங்கள் போன்ற

நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு 73 போ் விண்ணப்பங்களை வழங்கினா். இதில் அமா்சேவா சங்கப் பணியாளா்கள் அருள்சுப்பிரமணியன், மாரிசெல்வன், சரண்யா, கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT