தென்காசி

தென்காசி குறுவட்ட தடகளப் போட்டியில் இலஞ்சி பள்ளி சிறப்பிடம்

DIN

தென்காசியில் நடைபெற்ற குறுவட்ட தடகளப் போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குறுவட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 30 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பாரத் மாண்டிசோரி அணியினா் முதலிடத்தைக் கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.

மாணவா் ஆதித்யா, ஆண்களுக்கான மூத்தோா் தனிநபா் பிரிவில் முதலிடம் பெற்றாா். குறுவட்ட அளவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்ற மாணவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

பாரத் பள்ளி அணியினா் 12 தங்கப் பதக்கமும், 10 வெள்ளிப் பதக்கமும் பெற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற பாரத் அணியினரை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT