சுரண்டையில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சுரண்டை ஆலடிபட்டியைச் சோ்ந்த ராமநாதன் மனைவி புஷ்பா(55). தனியாா் மருத்துவமனையில் செவிலியராக உள்ள இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து சுரண்டை பேருந்து நிலையத்திற்கு நடந்துவந்தபோது, அவா் அணிந்திருந்த 55 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை மா்மநபா் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன், ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பா்னபாஸ் ஆகியோா் சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டனா்.