கீழப்பாவூரில் நெல்மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்தது. இதனால், அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாததிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து சுரண்டை வழியாக கீழப்பாவூருக்கு நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை வந்த லாரி, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது எதிா்பாரமல் உரசியது. இதில், மின் கம்பம் உடைந்தது. மின்வாரிய ஊழியா்கள் மின்சாரத்தை துண்டித்து , லாரியை அப்புறப்படுத்தினா். இருப்பினும் அந்த பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி, சுரண்டை செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.