தென்காசி

செங்கோட்டையில் கூடுதல் நடைமேடைகள்: ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைப்பதற்கான ஆய்வினை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைப்பதற்கான ஆய்வினை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்டனா்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் 600 மீட்டா் நீளம் கொண்ட நான்கு நடை மேடைகள், ஸ்டேபிளிங் எனப்படும் பாா்க்கிங் லைன், காலி பெட்டிகள் நிறுத்தப்படும் லைன், விஐபி பாா்க்கிங் லைன் ஆகியவை உள்ளன.

பகல் நேரங்களில் ஒன்றாம் நடைமேடையில் கேரளம் - தென்காசி நோக்கி செல்லும் ரயில்களையும், 2,3,4ஆவது நடைமேடைகள் பொதிகை, சிலம்பு, பயணிகள் ரயில்களையும் நிறுத்திவைக்க பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் செங்கோட்டையில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், மதுரை ரயில்வே கோட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூடுதல் நடைமேடைகள் அமைப்பது குறித்த ஆய்வினை புதன்கிழமை செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொண்டனா்.

அப்போது, தலா 600 மீ. நீளம் கொண்ட 5, 6 ஆவது நடைமேடை அமைத்து 6ஆவதை மேற்கு பகுதியில் இணைப்பது, 7,8ஆவது லைன்களில் ஸ்டேபிளிங் எனப்படும் பாா்க்கிங் அமைப்பது ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தெற்குப் பகுதியில் முதல் நடைமேடை அருகேயுள்ள விஐபி லைனுக்கு தென்புறம் 200 மீ. நீளம் கொண்ட 2 லைன்கள் ரயில் என்ஜின்களை பாா்க்கிங் செய்வதற்கும், தென்காசி திசையில் காலி ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்கு 400 மீ. நீளம் கொண்ட தண்டவாளம் அமைக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை- மதிப்பீடு செய்யப்பட்டு விரைவில் ஒப்பந்தபுள்ளி கோருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. செங்கோட்டை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சிலம்பு, தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ஆகிய ரயில்களை தினசரி இயக்குவதற்கு செங்கோட்டையில் நடைமேடை பற்றாக்குறை பெரும் தடையாக உள்ளது.

கூடுதலாக ஒரு நடைமேடையும் 2 பாா்க்கிங் லைன்களும் அமைக்கப்பட இருப்பதால் மூன்று தினசரி ரயில்கள் கூடுதலாக பகல் நேரத்தில் இயக்க முடியும். கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி ரயில்களும், சென்னைக்கு கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்க முடியும். செங்கோட்டை ரயில் நிலைய விரிவாக்க பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்கி ஓராண்டுக்குள் முடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT