சங்கரன்கோவில் அருகே சோ்ந்தமரத்தில் மயானக்கூடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் மயானக்கூடம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கி வைத்தாா்.
மேலநீலிதநல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா் டி.டி. ராமச்சந்திரன், கிளைச் செயலா் எஸ். செல்வராஜ், சீனிவாசன், சிற்றரசு, மகேஷ், டிடிசி. ராஜேந்திரன், சாா்லஸ், மாரியப்பன், முத்தமிழ், கோமதிராஜ், மகளிா் அணி பெல்ஸ், சுற்றுச்சூழல் அணி அகஸ்டின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.