திருநெல்வேலி

15 வட்டங்களில் நாளை மறுநாள் ரேஷன் பொருள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 10) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 10) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் 2ஆவது சனிக்கிழமையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஜூன் 10ஆம் தேதி 15 வட்டங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெறும்.
திருநெல்வேலி வட்டத்தில் தாதனூத்து கிராமம், பாளையங்கோட்டை வட்டத்தில் பொன்னாக்குடி, சங்கரன்கோவில் வட்டத்தில் என்ஜிஓ காலனி, தென்காசி வட்டத்தில் பூவனூர், செங்கோட்டை வட்டத்தில் செட்டிகுளம், சிவகிரி வட்டத்தில் பாரர்பட்டி கிராமத்தில் குறைதீர் முகாம் நடைபெறும்.
வீ.கே. புதூர் வட்டத்தில் வாடியூர் கிராமம், ஆலங்குளம் வட்டத்தில் கீழபட்டமுடையார்புரம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் அயன்சிங்கம்பட்டி, நான்குனேரி வட்டத்தில் ஏர்வாடி, ராதாபுரம் வட்டத்தில் உருமன்குளம், கடையநல்லூரில் திருவேட்டநல்லூர், திருவேங்கடம் வட்டத்தில் சந்திரன்கொண்டான், மானூர் வட்டத்தில் அலவந்தான்குளம், சேரன்மகாதேவி வட்டத்தில் பிள்ளைகுளம் ஆகிய கிராமங்களில் குறைதீர் முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT