திருநெல்வேலி

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் கைது

பாளையங்கோட்டை அருகேயுள்ள கக்கன்நகரைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள கக்கன்நகரைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
கக்கன்நகரில் உள்ள பாண்டியன் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கணேசன் (38). இவர், கடந்த மே 29ஆம் தேதி திருநெல்வேலி-தூத்துக்குடி சாலையில் அரியகுளம் சந்திப்பு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்ல முயன்றாராம். அவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் திருப்பதி கைது செய்தார்.
கணேசன் மீது ஏற்கெனவே அரிசிக் கடத்தல் வழக்குகள் உள்ளனவாம். இதனால் அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் கணேசன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT