புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 18ஆவது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இம்மாநாட்டுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் எம். அகஸ்டின் தலைமை வகித்தார். எம். அருணாசலம் சங்கக் கொடியேற்றினார். ஆர். முத்துசாமி, ஏ. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலன் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் எஸ். ஜெகதீசன், துணைப் பொதுச்செயலர் எஸ். ராஜாமணி உள்பட பலர் பேசினர்.
மாநாட்டில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது; மின்வாரியத்தில் கருணைத்தொகை பெறுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும்; தணிக்கைப் பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திருநெல்வேலி மாவட்ட புதிய தலைவராக ஏ. ஆறுமுகம், செயலராக கருப்பசாமி, பொருளாளராக வீரக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.