திருநெல்வேலி

புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவி சர்வதேச தேர்வில் சிறப்பிடம்

சர்வதேச அளவிலான தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளார்.

DIN

சர்வதேச அளவிலான தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளார்.
சர்வதேச நிறுவன செயலாளர்கள் ஒலிம்பியாடு தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத் தேர்வில் தியாகராஜநகர் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளியின் (சிபிஎஸ்இ) பிளஸ்-2 மாணவி வி.ஹரிணி பங்கேற்று முதலிடம் பிடித்தார். இதையொட்டி, தில்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல, வர்த்தக ஆசிரியர்கள் அறக்கட்டளை நடத்திய சர்வதேச வர்த்தக ஒலிம்பியாடு தேர்வில் 99.3 மதிப்பெண் பெற்று மாணவி வி.ஹரிணி தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளார். பிளஸ் 2 (சிபிஎஸ்இ) பொதுத் தேர்வில் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT