தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாநில அளவில் மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று முதல்வரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்தாண்டிற்கு, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 5 ஆண்டு தமிழகத்தில் வசித்தவராகவும், சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராகவும் இருக்க வேண்டும்.
உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.sdat.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 15ஆம் தேதிக்குள் பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணத்திடம் ஒப்படைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும். பின்னர், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.