வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பக்தர்களின் நலன் கருதி டாஸ்மாக் மதுக்கடையை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் குறுக்குத்துறை முருகன் கோயிலில் புதன்கிழமை வைகாசி விசாக விழா நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நகரத்துக்கு வரும் பக்தர்கள், அங்கிருந்து கோயிலுக்கு நத்தம் சாலையில் நடந்து வருவது வழக்கம். இந்த சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை புதன்கிழமை ஒருநாள் மூட வேண்டும் என திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையேற்று புதன்கிழமை மட்டும் அந்த மதுக்கடையை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்காக, அவருக்கு இந்து முன்னணி மாநகர் மாவட்டச் செயலர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.