திருநெல்வேலி

15 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் 4ஆம் கட்ட முகாம்கள் மார்ச் முதல் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதன்படி, வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள்: திருநெல்வேலி வட்டத்தில் சீதபற்பநல்லூர், சிறுக்கன்குறிச்சி, ராதாபுரம் வட்டத்தில் தெற்கு வள்ளியூர் 1, 2, அம்பாசமுத்திரம் வட்டத்தில் பிரம்மதேசம், நான்குனேரி வட்டத்தில் விஜயநாராயணம், சேரன்மகாதேவி வட்டத்தில் வடக்குஅரியநாயகிபுரம், அரசன்குளம், பாளை.யில் கொங்கந்தான்பாறை, புதுக்குளம், மானூர் வட்டத்தில் எட்டான்குளம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. சங்கரன்கோவிலில் வன்னிக்கோனேந்தல், திருவேங்கடத்தில் நாலாந்துலா, தென்காசி வட்டத்தில் குலசேகரப்பட்டி, செங்கோட்டை வட்டத்தில் கணக்குப்பிள்ளை வலசு, வீரகேரளம்புதூர் வட்டத்தில் அச்சங்குட்டம், ஆலங்குளம் வட்டத்தில் கீழப்பாவூர் பகுதி - 1, சிவகிரி வட்டத்தில் சுப்பிரமணியபுரம், கடையநல்லூர் வட்டத்தில் கொடிக்குறிச்சி.
முகாம்களில், அந்தந்தப் பகுதியினர் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி கோரி மனு அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

எஸ்கலேட்டா்களை பாதுகாப்பாக பயன்படுத்த பயணிகளுக்கு விழிப்புணா்வு: என்சிஆா்டிசி தொடங்கியது!

SCROLL FOR NEXT