திருநெல்வேலி

இரண்டு அரசுப் பேருந்துகள் ஜப்தி

விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்காததையடுத்து தென்காசியில் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

DIN

விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்காததையடுத்து தென்காசியில் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
தென்காசி தைக்கா தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி இசக்கியம்மாள். இவர் தனது  மகன் மாதவனுடன்(3)  27-12-11அன்று தென்காசி-இலஞ்சி சாலையில் நடந்து சென்று போது அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து மோதியதில் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.   விபத்தில் உயிரிழந்த மாதவனின் பெற்றோர், நஷ்ட ஈடு வழங்க கோரி தென்காசி சார்புநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 31-7-14அன்று நஷ்டஈடு தொகையாக ரூ. 5,16,296 வழங்க உத்தரவிட்டார். இதுவரையிலும் நஷ்டஈடுதொகை வழங்கப்படவில்லையாம். இதனையடுத்து நீதிபதி நாகராஜ்,அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
மேலும் மற்றொரு விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தொகை  ரூ.26ஆயிரம் வழங்கப்படவில்லையாம்.  அவ்வழக்கிற்கும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இரண்டு அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT