திருநெல்வேலி

"நாட்டுப்புறவியல் துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூய சவேரியார் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர் அருள்பணி த.சகாயராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 மத்திய அரசின் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம், பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரிக்கு ஆராய்ச்சி நிதியாக ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளது.
ஓராண்டு நடைபெறும் இந்த ஆராய்ச்சியின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படும் வளங்கள், மக்களின் கல்வியறிவு, சமூக பொருளாதார புள்ளிவிவரங்கள், மக்களின் கலாசாரம் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இதற்கு ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு சமூக அறிவியல் (எம்.ஃபில்) படித்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணி தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

SCROLL FOR NEXT