சென்னையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 15 இடங்களில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 412 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய மாவட்ட திமுக சார்பில், திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகே புதன்கிழமை பிற்பகலில் மாவட்டச் செயலர் அப்துல் வகாப் தலைமையில், திமுகவினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், திருநெல்வேலி சந்திப்புப் பகுதிக்கு வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம், கைலாசபுரம் என பல்வேறு பகுதிகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டன. போலீஸார் வந்து மறியலில் ஈடுபட்டதாக 52 பேரைக் கைது செய்தனர். இது போல இம் மாவட்டத்தில் 15 இடங்களில் அக்கட்சியினர் சாலை மறியலிலும், 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 412 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.