திருநெல்வேலி

பாளை.யில் விபத்து: முதியவர் சாவு

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவர் புதன்கிழமை இறந்தார்.

DIN

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவர் புதன்கிழமை இறந்தார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (70). திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம்.
 அப்போது இவரது மோட்டார் சைக்கிளும் அவ்வழியே வந்த மோட்டார்சைக்கிளும் மோதியதில் சங்கரன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT