கல்லிடைக்குறிச்சி அருகே மூதாட்டியைக் கொன்று அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர் முதல் தெரு கருப்பையா மனைவி புஷ்பம் (65). இவர் மகன் ஜெயசிங்குடன் வசித்து வந்தாராம். ஜெயசிங் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை ஜெயசிங் காலை 6 மணிக்கு வேலைக்குச் சென்று விட்டாராம். மீண்டும் வேலை முடிந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது புஷ்பம் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தாராம். அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த 1 பவுன் தோடு ஆகியவை திருடப்பட்டிருந்ததாம்.
இது குறித்து அவர் கல்லிடைகுறிச்சி போலீஸாருக்குக் கொடுத்தார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உதயகுமார், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காவல் ஆய்வாளர் சபியுல்லா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.