திருநெல்வேலி

மாவட்டத்தில் பரவலாக மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணையில் 6 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 4 மி.மீ, சேர்வலாறு அணையில் 2 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 8 மி.மீ, கடனாநதி அணையில் 2 மி.மீ, ராமநதி அணையில் 10 மி.மீ, கருப்பாநதி அணையில் 6 மி.மீ, குண்டாறு அணையில் 1 மி.மீ, அடவிநயினார் அணையில் 3 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 4 மி.மீ, தென்காசியில் 4.6 மி.மீ, ஆலங்குளத்தில் 24.2  மி.மீ, ஆய்க்குடியில் 6 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 553.72 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 200 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 76 கனஅடி, கடனாநதி அணைக்கு 61 கனஅடி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 12 கனஅடி,  கொடுமுடியாறு அணைக்கு 20 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்காக 354.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம்: பாபநாசம் அணை 67.80 அடி, சேர்வலாறு அணை 62.60 அடி, மணிமுத்தாறு அணை 32.90 அடி, கடனாநதி அணை 58.40 அடி,  ராமநதி அணை 68.00 அடி, கருப்பாநதி அணை 36.42 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 89.50 அடி, வடக்குப்பச்சையாறு அணை 3.25 அடி, நம்பியாறு அணை 5.72 அடி, கொடுமுடியாறு அணை 15 அடி.
புதன்கிழமை மாலையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை,  பெருமாள்புரம், பேட்டை, மேலப்பாளையம், சந்திப்பு உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT