குற்றச்செயலால் பாதிக்கப்பட்ட தருவை பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி
தமிழ்நாடு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு திட்டத்தின்படி பாளை.யை அடுத்த தருவையைச் சேர்ந்த சசிகலாவுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு திட்டத்தின்படி பாளை.யை அடுத்த தருவையைச் சேர்ந்த சசிகலாவுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்பட்டது.
பாளை.யை அடுத்த தருவையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேலு. இவருக்கு, தனது மகன் இசக்கிபாண்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. இதில் பாதிக்கப்பட்ட தங்கவேலுவின் மனைவி சசிகலாவுக்கு தமிழ்நாடு குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு திட்டம்- 2013-இன் படி நஷ்ட ஈடு வழங்க திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில் விசாரணை செய்த திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் பாதிக்கப்பட்ட சசிகலாவிற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மாவட் ஆட்சியருக்கும், மாவட்ட கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறை வழங்கிய ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சசிகலாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் வழங்கினார்.