திருநெல்வேலி

"வீரதீர செயலுக்கான மாநில விருது: சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்'

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக வீரதீர செயல்புரிந்து வரும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள்

DIN

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக வீரதீர செயல்புரிந்து வரும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும்,  பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர  செயல்புரிந்து வரும் 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளை கெளரவிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு முதல் மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசியபெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) இந்த விருதுடன் பாராட்டுப் பத்திரமும், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும். 
2020ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தில் விருது வழங்குவதற்காக  18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2019-ன் படி) தகுதியான சிறுமிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.  விண்ணப்பங்களை வரும் அக். 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர்,  காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு அனுப்பப்படும்.  தகுதியான ஒரு சிறுமி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா-ஆஸி. பிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

என் ஐயே, மை கோல்டே - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 60

SCROLL FOR NEXT