திருநெல்வேலி

பொலிவுறு நகரம் திட்டத்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது: விக்கிரமராஜா

DIN

பொலிவுறு நகரம் திட்டத்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படவுள்ளது. இதற்காக இங்குள்ள கடைகளை காலி செய்வதற்கு மாநகராட்சி சாா்பில் வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சித்தா கல்லூரி எதிரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பாளையங்கோட்டை வியாபாரிகள் சங்கத் தலைவா் அசோகன் தலைமை வகித்தாா். செயலா் அமிா்தராஜ் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட அனைத்து உள்ளாட்சிக் கடைகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்று விக்கிரமராஜா பேசியது: தமிழ்நாடு முழுவதும் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், பழைய வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள வியாபார நிறுவனங்களை மாநகராட்சி காலி செய்து வருகிறது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள 55 கடைகளையும் காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதற்கு போதிய அவகாசம் வழங்கவேண்டும். வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. அவா்களுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்த பிறகு, பழைய கடைக்காரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் கொடுக்க வேண்டும். வெளிமாநிலத்தவா்களுக்கு இடம் வழங்கக் கூடாது என்றாா் அவா்.

போராட்டத்தில், உள்ளாட்சிக் கடைகள் கூட்டமைப்பின் தலைவா் சாலமோன், நகர வியாபாரிகள் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ரசூல் மைதீன், தமுமுக மாவட்ட செயலா் பிலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்போராட்டத்தையொட்டி, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக தேசிய செயலரை கைது செய்து மகளை விடுவிக்க முயற்சி

சாத்தூரில் நகராட்சிப் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளை பரப்பியதாக இருவர் கைது

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT