திருநெல்வேலி

பாலத்தில் பைக் மோதி இளைஞர் பலி

DIN

புளியங்குடி அருகே பாலத்தில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை இறந்தார்.
சிங்கிலிபட்டி,  புது காலனியைச் சேர்ந்த சசி மகன் பன்னீர்செல்வம் (24).  லாரி ஓட்டுநரான இவர்,  ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கிலிபட்டியிலிருந்து, புளியங்குடிக்கு பைக்கில் சென்றபோது,   புன்னையாபுரம் அருகே பைக் நிலைதடுமாறி பாலத்தில் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு  திங்கள்கிழமை அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதிவேடு முறைகேடு மூலம் பணம் மோசடி: கூட்டுறவுத் துறை அலுவலருக்கு முன்பிணை

ராஜீவ் காந்தி நினைவு தினம்

கொடைக்கானல் கோடை விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

பாரத் பைபா் சேவையை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது

பழனி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் அவதி

SCROLL FOR NEXT