களக்காடு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் எஸ். கலைவாணன் தலைமை வகித்து, புலிகள் பாதுகாப்பு குறித்துப் பேசினார். மாணவிகள் அனுஷியா, நந்தினி ஆகியோர் புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர்.
பள்ளித் தாளாளர் ஆழ்வார் கலைவாணன் நன்றி கூறினார். பள்ளி மாணவர், மாணவிகள் புலி ஓவியத்தை வரைந்து பாராட்டைப் பெற்றனர்.