திருநெல்வேலி

பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு

DIN

திசையன்விளை அருகே  பெண்ணை தாக்கியதாக தந்தை மகன் உள்ளிட்ட  நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 திசையன்விளை அருகே கோட்டைகருங்குளத்தைச் சேர்ந்த சற்குணம் மனைவி தர்மத்தாய் (60).  இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் குமார் (40) என்பவருக்கும்,  மத்திய அரசின் இலவச வீடு கட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் தர்மத்தாயை, குமார் மற்றும் அவரது உறவினர் அலெக்சாண்டர் உள்ளிட்ட 4 பேர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து  தர்மத்தாய் அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, தந்தை மகன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

நடிகர் மோகனின் 'ஹரா' பட டீசர்!

செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு!

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

SCROLL FOR NEXT