உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, வள்ளியூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அன்னை அமராவதி மருத்துவனை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவா் சங்கரன் பங்கேற்று, நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் முறைகள், நீரிழிவு நோயாளிகள் கடைப்படிக்க வேண்டிய உணவு முறை குறித்துப் பேசினாா்.
தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்திமதி தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அவா் பங்கேற்றுப் பேசினாா். பள்ளியின் தாளாளா் மருத்துவா் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவா் சங்கரன் பரிசுகள் வழங்கினாா். விழாவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை துா்கா தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். காந்திமதி பள்ளித் தலைமை ஆசிரியை உமா வரவேற்றாா். ஆசிரியை பேபி ராதா நன்றி கூறினாா்.