திருநெல்வேலி

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா: செப். 20இல் கொடியேற்றம்

DIN

திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் காலையில் ஜெபமாலை பவனியும் அதைத் தொடர்ந்து சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கிள் செகதீசு அடிகள் தலைமையில் கொடியேற்றமும்,  திருப்பலியும் நடைபெறும்.   செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் மறையுரை நிகழ்த்துகிறார். இரவில் ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 
திருவிழா நாள்களில் திருத்தலத்தில் காலையில் ஜெபமாலை பவனி, திருப்பலி, மாலையில் இறைச்சிந்தனை, நற்கருணை ஆசீர், இரவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். அருள்தந்தையர் ஜார்ஜ் ஆலிபன், விஜயன், சகாயராஜ், வி.கே.எஸ், அருள்ராஜ், செல்வராயர், ஜோசப் ரவிபாலன் ஆகியோர் மறையுரை நிகழ்த்துவர்.
8ஆம் திருநாளில் மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும், 9ஆம் திருநாளில் கள்ளிகுளம் அருள்தந்தை வின்சென்ட் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறும். இதில், பாளையங்கோட்டை  மறைமாவட்ட முதன்மைக்குரு சேவியர் டெரன்ஸ் மறையுரை ஆற்றுகிறார்.
 10ஆம் திருநாள் (செப்.29) காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம்  தலைமையில் திருவிழா  திருப்பலியும், நண்பகலில்  உலக ரட்சகரின் சப்பர பவனியும் நடைபெறும். 30ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் பொத்தகாலன்விளை பங்குத்தந்தை வென்ஸ்குமார் தலைமையில் கொடியிறக்கமும், மாலையில் அசன விருந்தும் நடைபெறும்.  ஏற்பாடுகளை, திருத்தல பங்குத்தந்தை மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT