திருநெல்வேலி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காலாண்டு விடுமுறை பயிற்சி வகுப்புகள்

DIN


திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி, பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. 
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரும் 24  ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. 24 ஆம் தேதி- வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் பயிற்சி  நடைபெறுகிறது. மாணவ- மாணவிகள் வரைபடத் தாள், வரைவதற்கு தேவையான பொருள்களுடன் பங்கேற்கலாம்.
25, 26 ஆம் தேதிகளில் கலைப்பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் வண்ணத் தாள் கொண்டு அழகிய பொம்மை தயாரித்தல், சிறிய அளவிலான செயற்கை வீணை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 27, 28 ஆம் தேதிகளில் கண்ணாடி ஓவியப் பயிற்சி நடைபெறுகிறது. 30 ஆம் தேதி உல்லன் நூல் கொண்டு அழகிய நாய்க்குட்டி பொம்மை தயாரிக்கும் பயிற்சியும், அக்டோபர் 1 ஆம் தேதி ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, சிறப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 0462- 2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

தொடரும் பட்டாசு தீ விபத்துகள்: விராலிமலை அருகே ஒருவர் பலி

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT