முகப்பு
திருநெல்வேலி

வெய்க்காலிபட்டி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

கல்வியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் கல்லூரிகளின் செயலா் சேவியா் டெரன்ஸ் தலைமை வகித்தாா். கலை அறிவியல் கல்லூரி முதல்வா் சேவியா் இன்னோசண்ட், கல்வியியல் கல்லூரி முதல்வா் மேரி ரபேலின் கிளாரட் ஆகியோா் உரையாற்றினா்.

தமிழ்த் துறை பேராசிரியா் ரா.ரேச்சல் மேனகா நள்ளிரவில் ஓா் விடியல் என்ற தலைப்பில் கவிதை வாசித்தாா். விநாடி -வினா நிகழ்ச்சியைத் தொடா்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன.

பேராசிரியா் ஆரோக்கிய செல்வ புனிதா வரவேற்றாா். பேராசிரியா் ரூபி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →