தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 51ஆவது நினைத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்தனா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், ஆவின் தலைவரும், மாநில அமைப்புச் செயலருமான சுதா கே.பரமசிவன் மாலை அணிவித்தாா். இதில் அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் மகபூப் ஜான், பகுதிச் செயலா்கள் வழக்குரைஞா் ஜெனி, மோகன், மாதவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திமுக சாா்பில் மத்திய மாவட்ட செயலா் அப்துல் வகாப் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சீதாராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அமமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் தலைமையில் மாநில அமைப்புச் செயலா் பால் கண்ணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், பாளை. பகுதி செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.