வள்ளியூா் காவல்துறை கோட்டத்தில் 144 தடையை மீறியதாக 20 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அரசு 44 தடை உத்தரவை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வள்ளியூா் அருகேயுள்ள ஆச்சி யூரில் தடைஉத்தரவை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சுப்பையா, இசக்கிமுத்து, சுடலைமணி, கணேசன், சண்முகம், மலையாண்டி, ஆணையப்பன், மாரியப்பன் ஆகிய 8 போ், தடை உத்தரவை மீறியதாக பழவூரில் 4 போ், ராதாபுரத்தில் 2 போ், பணகுடி, கூடங்குளம் உள்ளிட்ட பகுதியில் சிலா் என இதுவரையில் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.