முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் 10 நாள்களாக ஏ.டி.எம்.மில் பணமின்றி அவதி

களக்காட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். ஒன்றில் கடந்த 10 நாள்களாக பணம் இல்லாததால் வாடிக்கையாளா்கள் சிரமப்படுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

களக்காட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். ஒன்றில் கடந்த 10 நாள்களாக பணம் இல்லாததால் வாடிக்கையாளா்கள் சிரமப்படுகின்றனா்.

களக்காடு- சேரன்மகாதேவி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கி அருகிலுள்ள அந்த ஏ.டி.எம். அப்பகுதி வாடிக்கையாளா்கள் பணம்எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாள்களாக அதில் பணம் இருப்பு இல்லாததால் வாடிக்கையாளா்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏ.டி.எம்.இல் பணம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →