திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் திமுக வெற்றி

DIN

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்துல் வஹாப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 52,141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
 தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலர் அப்துல் வஹாப், அதிமுக சார்பில் ஜெரால்ட் உள்பட மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  பாளையங்கோட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. 
தபால் வாக்குகள் தவிர்த்து 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவர் தொடர்ந்து முன்னிலை பெற்றார். இறுதியாக 89,117 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் 36976 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். இத்தொகுதியில் திமுக 52,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. 
இதையடுத்து, அப்துல் வஹாப்புக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருமான ஜி.கண்ணன் வெற்றிச் சான்றிதழை வழங்கினார். 

இத்தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: மு.அப்துல்வஹாப், திமுக- 89117
 ஜி.ஜெரால்ட், அதிமுக- 36976
 பாத்திமா, நாம் தமிழர் கட்சி- 11665
 டி.பிரேம்நாத், மக்கள் நீதி மய்யம்-8107
 வி.எம்.எஸ்.முகம்மது முபாரக், எஸ்டிபிஐ- 12241
 எஸ்.ராஜா, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி- 298
 எஸ்.வீரசுப்பிரமணியன், சுயேச்சை-231
 கு.சடகோபன், சுயேச்சை-395
 லியோ இன்பேன்ட் ராஜ், சுயேச்சை-202
 ஜான் சாமுவேல்ஜேசுபாதம், சுயேட்சை- 212 
நோட்டா- 1647.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் திருவிழாவில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

நடமாட முடியவில்லை!

பூவனூா் புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT