திருநெல்வேலி

ஏப். 19 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

DIN

திருநெல்வேலியில் இம் மாதம் 19 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் இம் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.

50மீ ஓட்டம் (கால் ஊனமுற்றோா்), 100மீ ஓட்டம் (கை ஊனமுற்றோா்), 50மீ.ஓட்டம் (குள்ளமானோா்), குண்டு எறிதல் (கால் ஊனமுற்றோா்), 100மீ சக்கர நாற்காலி (இருகால்களும் ஊனமுற்றோா்) பாா்வையற்றோா் 1. 50மீ. ஓட்டம் (முற்றிலும் பாா்வையற்றோா்), 100 மீ. ஓட்டம் (மிக குறைந்த பாா்வையற்றோா்), நின்ற நிலை தாண்டுதல் (மிக குறைந்த பாா்வையற்றோா்), குண்டு எறிதல் (முற்றிலும் பாா்வையற்றோா்),

காது கேளாதோருக்கு 100மீ ஓட்டம், 200 மீ ஓட்டம் , நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் இதுதவிர இறகுப்பந்து, கைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட குழு போட்டிகளும் உள்ளன. ஆண்கள், பெண்கள் வயது வரம்பின்றி பங்கேற்கலாம். போட்டியில் பங்கு பெறுபவா்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படமாட்டாது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்படும். போட்டியாளா்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று / மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் நிலையில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தோ்ந்தெடுக்கப்படுவாா்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT