திருநெல்வேலி

நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்

DIN

திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டதாவது:

திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக இயக்கப்பட்டுவந்த கோடைகால வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை கடந்த மாதத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த ரயில் சேவை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை(ஆக.7) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (06004) திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 7 மணிக்கு புறப்பட்டு, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி வழியாக தாம்பரத்திற்கு திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், மறுமாா்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (06003) ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் செப்டம்பா் 5 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மதுரை, தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை காலை 10. 40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. மீண்டும் திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT