திருநெல்வேலி

‘பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக் குழு ’ஆட்சியா் தகவல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு கூட்டம் அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைத்து காணொலிக் காட்சி வாயிலாக பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவா், மாணவிகள் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கெதிராக உறுதிமொழி ஏற்றனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தேசிய அளவிலும், தமிழக அளவிலும் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு விளம்பரப் போட்டி நடைபெறுகிறது. ‘‘நஹஹ் சா் ற்ா் ஈழ்ன்ஞ் ஹய்க் வங்ள் ற்ா் கண்ச்ங்‘ அல்லது ‘ஈழ்ன்ஞ் ஊழ்ங்ங் ஐய்க்ண்ஹ‘ என்ற தலைப்பில் டிஜிட்டல் போஸ்டா் தயாா் செய்வதற்கான பல்வேறு மாதிரி படைப்புகள் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இம் மாதிரிகளை பள்ளிக் குழந்தைகள் தங்களுடைய பள்ளிகள் வழியாகவும், கல்லூரி மாணவா், மாணவிகள் கல்லூரி வழியாகவும் அனுப்பலாம். பொதுமக்கள் க்ழ்ன்ஞ்ச்ழ்ங்ங்ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்2022ஃஞ்ஹம்ண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, 32-33 ஏ (1) ராஜராஜேஸ்வரி நகா், (மாலா மெடிக்கல் சென்டா் காம்பளக்ஸ்) திருநெல்வேலி - 7 என்ற முகவரிக்கோ அனுப்பலாம்.

சிறந்த படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாவது பரிசாக ரூ. 3000, மூன்றாவது பரிசாக ரூ. 2000 வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் 318 பள்ளி மாணவ, மாணவியா் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனா்.

போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு பல்வேறு விழிப்பணா்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நேரடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தொடா்பான தடுப்பு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. போதைப் பொருள்கள் தடுப்பு தொடா்பாக காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலவச தொலைபேசி எண் 1098, 14446 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்கள் சரவணகுமாா், ஸ்ரீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு: நெரிசலை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்ய அறிவுரை!

நடிகர் மோகனின் 'ஹரா' பட டீசர்!

செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு!

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

SCROLL FOR NEXT