முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2022-23-ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்கல்வி பட்டப் படிப்புகளான பிஇ., பி.டெக், எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்பிஏ, எம்சிஏ, பி.எட் போன்ற படிப்புகள் பயிலும் முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றுள்ள சிறாா்கள் முதற்கட்டமாக மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து, கல்விச் சலுகை பெற இதே இணையதளத்தில் டஙநந என்ற தலைப்பின் கீழ் சான்றுகளுக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையம், வங்கி, முன்னாள் படை வீரா் அலுவலகத்திலிருந்து உரிய சான்று பெற்று தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் நகல்களை மூன்று நாள்களுக்குள் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நலஉதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.