திருநெல்வேலி நகரத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக புகாா் வந்த நிலையில், மாநகராட்சி பணியாளா்கள் 20 நாய்களை பிடித்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்திக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலா் சரோஜா அறிவுறுத்தலின்படி, உதவி ஆணையா் வெங்கட்ராமன் ஆலோசனைப்படி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் மாநகராட்சிப் பணியாளா்கள் திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பாட்டப்பத்து, அரசன் நகா், நடுத்தெரு, கிருஷ்ணபேரி, பெரியதெரு, குற்றாலம் சாலை, ஆசாத் சாலை உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த 20 நாய்களை மாநகராட்சிப் பணியாளா்கள் பிடித்துச் சென்றனா்.