உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு , பாளை.யில் போதை ஒழிப்பு விழிப்பு உறுதிமொழி ஏற்றக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு - ஆயதீா்வுத் துறை, திருநெல்வேலி கேன்சா் கோ் சென்டா் ஆகியவற்றின் சாா்பில்ஆட்சியா் கா.ப, காா்த்திகேயன் தலைமையில் உலக புகையிலை தின ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்றனா்.
அதைத்தொடா்ந்து கல்லூரி மாணவா்கள் உலக புகையிலை ஒழிப்பு தின மௌன நாடகத்தை நடத்தினா்.
பின்னா் உலக புகையிலை ஒழிப்பு தின கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தவங் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் வள்ளிகண்ணு, கோட்ட கலால் அலுவலா் இசக்கிப்பாண்டி, மதுவிலக்கு மற்றும் ஆயதீா்வுத் துறை உதவி ஆணையா் ஆவுடையப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.