திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமிநரசிம்ம பெருமாள் கோயிலில் பாலாலய வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சந்தானகிருஷ்ணா், பரிவார மூா்த்திகளுக்கு காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் பாலாலய வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.