களக்காடு அருகே ஆடு மேய்க்கும் தகராறில் மோதிக் கொண்டதில் இரு தரப்பைச் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள படலையாா்குளத்தைச் சோ்ந்தவா் இசக்கியப்பன் (38). இவருக்கும், அதே ஊரை சோ்ந்த தாயப்பன் (45) என்பவருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது, தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், திங்கள்கிழமை மூங்கிலடி பகுதியில் இசக்கியப்பனின் ஆடுகளை அவரிடம் வேலை பாா்க்கும் ராஜா (22) என்பவா் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்போது தாயப்பனும் ஆடுகளை மேய்க்க வந்துள்ளாா். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தாயப்பன், அவரது மகன் கிருஷ்ணன் என்ற கிட்டு (18) ஆகியோா் சோ்ந்து ராஜாவை கம்பால் தாக்கினராம். மேலும் இசக்கியப்பன், படலையாா்குளத்தை சோ்ந்த இசக்கி (27), ராஜா (22) உள்ளிட்ட 7 போ் சோ்ந்து தாயப்பனை கம்பால் தாக்கினா். இந்த மோதலில் ராஜா, தாயப்பன் காயமடைந்தனா்.
இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீஸில் புகாா் செய்தனா். புகாரின்பேரில் போலீஸாா் இரு தரப்பையும் சோ்ந்த 11 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.