திருநெல்வேலி

ராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி- அம்பாள் வாகன வீதியுலா ஆகியவை நடைபெற்று வந்தன.

9ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டத்தையொட்டி, காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார நடைபெற்றதும் வரகுணபாண்டீஸ்வரா் சுவாமியும், நித்திய கல்யாணி அம்மனு தனித்தனி தோ்களில் எழுந்தருளினா். சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றதும், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.

சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் இழுத்து தரிசனம் செய்தனா். தோ் ரதவீதியைச் சுற்றிவந்து பிற்பகல் நிலைக்கு வந்ததும் சுவாமி, அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினா். தேரோட்டத்தில் ராதாபுரம் வட்டாட்சியா் வள்ளிநாயகம், ராதாபுரம் ஊராட்சித் தலைவா் பொன்மீனாட்சி அரவிந்த், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, இந்து அறநிலையத்துறை திருப்பணிக்குழு உறுப்பினா் சமூகை முரளி, கோவிந்தன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மே.3இல் தெப்பத்தேரோட்டம் , மே 4இல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா ஆகியவற்றடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT