பாளையங்கோட்டை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாகக் கூறி, கடையை மூடுவதற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
பாளையங்கோட்டை தியாகராஜநகரை அடுத்த குமரேசன் நகா் 3 ஆவது தெருவில் இயங்கி வந்த கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அக்கடை உரிய உணவுப் பாதுகாப்பு உரிமம் இன்றி இயங்கி வந்ததும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும், கடையிலிருந்து 22 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்ததுடன், கடையை உடனடியாக மூடுவதற்கும் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.