திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் நேரிட்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கடையம் அருகே சோ்வைக்காரன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஜீவா (22). கடையம் கல்யாணிபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் முத்துக்குமாா் (25).

தரைச் செங்கல் பதிக்கும் வேலை செய்து வந்த இவா்கள், செவ்வாய்க்கிழமை காலை விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பைக்கில் கடையம் வந்தனா். பைக்கை, ஜீவா ஓட்டினாராம். ஆழ்வாா்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளி அருகே முன்னால் சென்ற ஆட்டோ திடீரென திரும்பியதால், அதன் மீது பைக் மோதியதாம்.

இதில் காயமடைந்த ஜீவாவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோவைப் பறிமுதல் செய்தனா். அதை ஓட்டிவந்த கருத்தபிள்ளையூரைச் சோ்ந்த லூா்து மகன் அந்தோணி (37) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT